நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

யாருடைய பதவியையும் நான் தட்டி பறிக்கவில்லை; மித்ராவுக்கு மீண்டும் தலைமையேற்றார் டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

யாருடைய பதவியையும் நான் தட்டி பறிக்கவில்லை என்று  மித்ராவுக்கு மீண்டும் தலைமையேற்றுள்ள டத்தோஸ்ரீ ரமணன் ராமக்கிருஷ்ணன் கூறினார்.

இந்திய சமுதாயத்தின் உருமாற்ற திட்டங்களுக்காக மித்ரா உருவாக்கப்பட்டு அதன் கீழ் 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படுகிறது.

இந்நிதியை கண்காணிக்கும் வகையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு அதற்கு நான் தலைவராக இருந்தேன்.

ஆனால் துணையமைச்சராக பொறுப்பேற்ற பின் அப்பொறுப்பில் இருந்து விலகினேன்.

இந்நிலையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் எனக்கு மீண்டும் அப்பொறுப்பை வழங்கியுள்ளார்.

பிரதமரின் நம்பிக்கையின் அடிப்படையில் தான் எனது கடமையை மேற்கொண்டு வருகிறேன்.

ஆக நான் யாருடையை பொறுப்பையும் குறிப்பாக திட்டங்களையுன் நான் பறித்துக் கொள்ளவில்லை.

இதில் அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். பிரதமர் கொடுக்கும் வேலையை மட்டும் தான் நான் செய்கிறேன்.

அப்படி மித்ராவின் தலைவர் பொறுப்பு யாருக்கும் வேண்டும் என்றால் அதை தாராளமாக எடுத்து கொள்ளலாம்.

எனக்கு எந்த ஆட்சேனையும் இல்லை என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்









தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset