நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புக்கிட் கியாரா ரூமா பாஞ்சாங் மக்களுக்கு உணவு கூடைகள் அன்பளிப்பு

கோலாலம்பூர்:

வரும் அக்டோபர் 20 ஆம் தேதி இந்து பெருமக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடவுள்ளனர்.

இந்நிலையில் மலேசியாவில் தீபாவளி பண்டிகையை கலை கட்டியிருக்கிறது.

வசதி குறைந்த மக்களுக்கு மடானி அரசாங்கத்தின் சார்பில் உணவு கூடைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சிகாம்புட் கெஅடிலான் தொகுதி தலைவர் விக்னேஸ்வரன் குணசேகரன் தலைமையில் புக்கிட் கியாரா ரூமா பாஞ்சாங்கில் வசிக்கும் 100 குடும்பங்களுக்கு உணவு கூடைகள் வழங்கப்பட்டது.

வீடு வீடாக சென்று இந்த உணவு கூடைகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் எந்தவொரு இனத்தையும் புறக்கணிக்கவில்லை.

அனைவரையும் அரவணைத்து செல்கிறது என்று விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தித்திக்கும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழும் அனைவருக்கும் அவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset