நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பட்ஜெட் கட்டமைப்பு வெறும் கோட்பாட்டின் அடிப்படையில் அல்ல; பொருளாதார யதார்த்தத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்: பிரதமர்

கோலாலம்பூர்:

பட்ஜெட் கட்டமைப்பு வெறும் கோட்பாட்டின் அடிப்படையில் அல்ல; பொருளாதார யதார்த்தத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

தேசிய பட்ஜெட் கட்டமைப்பைத் தயாரிப்பது பொருளாதாரக் கோட்பாட்டை மட்டும் அடிப்படையாகக் கொண்டிருக்க முடியாது.

மாறாக நாட்டின் கடன், பற்றாக்குறை மற்றும் வருவாய் நிலைகள் உட்பட அரசாங்கம் எதிர்கொள்ளும் தற்போதைய யதார்த்தத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

நாட்டின் தற்போதைய நிதி நிலைமை கடந்த காலத்திலிருந்து வேறுபட்டது.

குறிப்பாக 90களில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11% வரை எட்டியது.

இதனால் அரசாங்கம் ஒரு சமநிலையான பட்ஜெட்டை அடையவும், அதைத் தொடர்ந்து சில ஆண்டுகளுக்குள் நிதி உபரியை அடையவும் முடிந்தது.

இப்போது நிலைமை வேறு. நாம் பெருத்த கடனையும் அதிக பற்றாக்குறையையும் பெற்றுள்ளோம்.

எனவே தற்போதைய தேவைகளுக்கு ஏற்ற பட்ஜெட் கட்டமைப்பை வகுப்பதற்கு முன்பு இவை அனைத்தும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று நிதியமைச்சக ஊழியர்களின் கூட்டத்தில் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset