நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்த உலகம் போலியானது, நான் வெற்றி பெற்றேன்; மாணவி கொலை வழக்கின் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது: போலிஸ்

ஷா ஆலம்:

இந்த உலகம் போலியானது, நான் வெற்றி பெற்றேன் என மாணவி கொலை வழக்கின் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிலாங்கூர் போலிஸ் தலைவர் டத்தோ ஷாசாலி கஹார் இதனை தெரிவித்தார்.

பெட்டாலிங் ஜெயாவின் பண்டார் உத்தாமாவில் உள்ள இடைநிலைப் பள்ளியில் நேற்று ஒரு மாணவியை மாணவர் கத்தியால் குத்தி கொன்றான்.

அப் பெண்ணைக் குத்தியதாக நம்பப்படும் சந்தேக நபருக்குச் சொந்தமான ஒரு குறிப்பை போலீலிசார் கைப்பற்றியுள்ளனர்.

14 வயது ஆண் சந்தேக நபரைக் கைது செய்து முதற்கட்ட விசாரணையின் போது அந்தக் கடிதம் கண்டுபிடிக்கப்பட்டது.

காவல்துறையினர் அந்தக் குறிப்பைக் கண்டுபிடித்ததை நான் உறுதிப்படுத்துகிறேன், அது சம்பவ இடத்தில் உள்ள கழிப்பறையில் அல்ல, ஆரம்ப ஆய்வின் போது சந்தேக நபருடன் கைப்பற்றப்பட்டது.

இந்தக் குறிப்பு தற்போது விசாரணை அதிகாரிகளால் விசாரிக்கப்படுகிறது.

இன்று சிலாங்கூர் போலிஸ் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset