நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போதைப்பொருள், வட்டார பாதுகாப்பு பிரச்சினைகள் ஆகியவற்றைச் சமாளிக்க மலேசியா-கம்போடியா ஒத்துழைப்பை வலுப்படுத்தும்: ஜாஹித்

பியோன் பென்:

போதைப்பொருள், வட்டார பாதுகாப்பு பிரச்சினைகள் ஆகியவற்றைச் சமாளிக்க மலேசியா-கம்போடியா ஒத்துழைப்பை வலுப்படுத்தும்.

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை தெரிவித்தார்.

எல்லை தாண்டிய போதைப்பொருள் துஷ்பிரயோகத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் வட்டார பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் ஒத்துழைப்பை வலுப்படுத்த மலேசியாவும் கம்போடியாவும் ஒப்புக் கொண்டுள்ளன.

கம்போடிய துணைப் பிரதமர் நெத் சவோயுனுடன் இன்று பியோன் பென்னில் நடந்த சந்திப்பின் போது இந்த நிகழ்ச்சி நிரல் விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பு, தற்போதுள்ள ஒத்துழைப்பின் சாதனைகளை மறு மதிப்பீடு செய்வதற்கும், இராஜதந்திர நடவடிக்கைகளில், 

குறிப்பாக சட்ட அமலாக்கம், எல்லை தாண்டிய போதைப்பொருள் தடுப்பு, மறுவாழ்வு, இளைஞர் பாதுகாப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பில் ஒத்துழைப்பு ஆகியவற்றில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான புதிய நடவடிக்கைகளை வகுப்பதற்கும் ஒரு முக்கியமான தளமாகும் என்று அவர்  தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset