நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

1எம்டிபி தொடர்பான வங்கி மீது அரசாங்கம் வழக்குத் தொடரவில்லை

கோலாலம்பூர்:

1எம்டிபி நிதி மோசடியில் ஈடுபட்டதாக எந்த வங்கிகள் மீதும் அரசாங்கம் வழக்குத் தொடரவில்லை.

இருப்பினும், 1 எம்டிபி எட்டு வங்கிகள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளதாக நிதியமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை தெரிவித்தது.

அதாவது கோல்ட்மேன் சாக்ஸ் குரூப் இன்க், ஆம்பேங்க் குரூப், ஜேபி மோர்கன் (சுவிட்சர்லாந்து) லிமிடெட், டாய்ச் பேங்க் (மலேசியா) பெர்ஹாட், பிஎஸ்ஐ பேங்க் சிங்கப்பூர், அமிகார்ப் குரூப், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் பேங்க் சிங்கப்பூர், ஆர்பிஎஸ் கவுட்ஸ் ஆகியவை அந்த வங்கிகளாகும்.

மக்களவைக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலின் மூலம், அரசாங்கமும் 1 எம்டிபியும் கோல்ட்மேன் சாக்ஸ் எனப்படும் மூன்று நிதி நிறுவனங்களுடன் மொத்தம் 3.9 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒரு தீர்வை எட்டியுள்ளது.

இதில் 2.5 பில்லியன் அமெரிக்க டாலர் ரொக்கம், 1.4 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சொத்து மீட்பு உத்தரவாதங்கள் உள்ளதாக அது  அறிவித்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset