நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பண்டார் உத்தாமா பள்ளி நிர்வாகத்தினர் விசாரணைக்காக கல்வி இலாகாவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்

புத்ராஜெயா:

பண்டார் உத்தாமா பள்ளி நிர்வாகத்தினர் விசாரணைக்காக கல்வி இலாகாவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கல்வி இயக்குநர் அசாம் அகமது இதனை கூறினார்

இன்று காலை பண்டார் உத்தாமாவில் உள்ள இடைநிலைப் பள்ளியில் 16 வயது மாணவி கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தை அடுத்து பள்ளியின் நிர்வாகக் குழு, விசாரணைக்கு உதவ மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு மாற்றப்படும்.

விசாரணை முடியும் வரை இந்த நடவடிக்கை அமலில் இருக்கும். மேலும் பள்ளியின் செயல்பாட்டை இது பாதிக்காது.

விசாரணை இப்போது விரைவாக தொடங்க வேண்டும்.

எந்த அதிகாரிகள், ஊழியர்களை வரவழைக்க வேண்டும் என்பதை நாங்கள் மதிப்பிடுவோம்.

விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது பள்ளியை மூட வேண்டிய அவசியமில்லை என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset