நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆலய வளாகத்தில் கோழி, ஆடு, மீன் விற்பனை: தெப்ராவ் கெஅடிலான் கண்டனம்

உலு திராம்:

ஆலய வளாகத்தில் கோழி, ஆடு, மீன் விற்பனையை மேற்கொண்ட ஜொகூர் மாநில அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

தெப்ராவ் கெஅடிலான் தலைவர் பிரகாஷ் மணியம் இதனை கூறினார்.

சமீபத்தில் உலு திராம் டேசா செமர்லாங்கில் உள்ள ஸ்ரீ மகா முனீஸ்வரர் ஆலயம் தேவஸ்தான வளாகத்தில் மாநில அரசின் விற்பனை சந்தை நடைபெற்றது.
இந்த சந்தையில்  கோழி, ஆடு,  மீன் விற்பனை செய்யப்பட்டது ஏமாற்றத்தை அளிக்கிறது.

ஆலய பகுதியில் இறைச்சி, மீன் விற்பனையை அனுமதிப்பது இந்து சமூகத்தினரிடையே கவலைகளையும் ஆழ்ந்த உணர்ச்சிகரமான எதிர்வினைகளையும் எழுப்பியுள்ளது.

இந்த முயற்சி உள்ளூர் சமூகத்தை ஆதரிக்கும் சிறந்த நோக்கத்துடன் தொடங்கப்பட்டிருக்கலாம்.

ஆனால் சரியான செயல்படுத்தல் வழிகாட்டுதல்கள் இல்லாதது முடிவில் கடுமையான பின்னடைவைக் குறிக்கிறது.

இந்து மத நடைமுறைகளில் பொருத்தமற்றதாகக் கருதப்படும் பொருட்களை, குறிப்பாக இறைச்சி, மீனை, கோயில் பகுதிக்குள் அல்லது உள்ளே விற்பனை செய்ய அனுமதிப்பது, மத விதிமுறைகள் மற்றும் பொது நம்பிக்கை இரண்டையும் தெளிவாக மீறுகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset