நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குறைந்த மாணவர்கள் எண்ணிக்கையிலான தமிழ்ப்பள்ளிகள் பாதுகாக்கப்பட வேண்டும்: டத்தோ சிவக்குமார்

கோல சிலாங்கூர்:

குறைந்த மாணவர்கள் எண்ணிக்கையிலான தமிழ்ப்பள்ளிகள் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும்.

மஹிமா தலைவரும் டிஎஸ்கே சமுக நல அமைப்பின் தலைவருமான டத்தோ ந. சிவக்குமார் இதனை வலியுறுத்தினார்.

சுங்கை தெராப் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டத்தில் மகிழ்ச்சி.

டிஎஸ்கே அமைப்பின் வாயிலாக பள்ளி மாணவர்கள், ஆசிரியர் ஆகியோருக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டது.

அதே வேளையில் இப்பள்ளியில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

மாணவர்கள் எண்ணிக்கை குறையாக இருந்தாலும் இப்பள்ளி தரமான பள்ளியாக உள்ளது.

இவ்வேளையில் தலைமையாசிரியர் கன்னியம்மாள் உட்பட பள்ளி நிர்வாகத்தினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்ப்பள்ளிகள் நாம் பாதுகாக்க வேண்டும். குறைந்த மாணவர்கள் இருந்தாலும் இப்பள்ளி தொடர்ச்சியாக செயல்பட வேண்டும்.

இது தான் எனது எதிர்பார்ப்பு என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.

முன்னதாக பள்ளி மாணவர்களுக்கு அன்பளிப்பு வழங்கிய டத்தோ சிவக்குமார் உட்பட அனைவருக்கும் பள்ளி வாரியக் குழுத் தலைவர் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset