நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டெங்கில் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் வங்காளதேச தொழிலாளி உயிரிழந்தார்

டெங்கில்:

டெங்கில் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில்  வங்காளதேச தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புப் பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தர் இதனை கூறினார்.

டெங்கில் சைபர்சவுத் அருகே உள்ள ஒரு மேம்பாட்டு பகுதியில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பங்களாதேஷ் ஒப்பந்ததாரர் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும் அவரது சக ஊழியர் ஒருவர் காயமடைந்தார்.

தனது துறைக்கு மாலை 4.19 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகத் தெரிவித்தார்.

டெங்கில் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து இயந்திரங்கள் சுமார் ஒன்பது நிமிடங்கள் கழித்து சம்பவ இடத்திற்கு வந்தன என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset