நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேரா இந்தியர் வர்த்தக சபை தலைவராக கேசவன் முனுசாமி போட்டியின்றி ஏகமனதாக தேர்வு

ஈப்போ:

பேரா வர்த்தக சபையின் தலைவராக கேசவன் முனுசாமி போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

நேற்று முன்தினம் பேரா இந்தியர் வர்த்தக சபை மண் டபத்தில் 2025ஆம் ஆண்டு பொதுக் கூட்டம் நடைபெற்றது.

பொதுக் கூட்டத்தை தொடர்ந்து அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு சபையை வழி நடத்துவதற்கு பொறுப்பாளர்கள் தேர்வு நடை பெற்றது.

இத்தேர்தலில் தலைவர் பதவிக்கு உயர்திரு கேசவன் முனுசாமி வேட்புமனு மட்டுமே பெறப்பட்டதால் தலைவராக  போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

துணைத் தலைவர் பதவிக்கு  இருவர் போட்டியிட்டனர்.  இதில் ரவி சங்கர் தேர்வு பெற்றார்.

சபையின் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியில்லாததால் ஏகாம்பரம் தேர்வு செய்யப்பட்டார்.

செயலாளர் பதவிக்கு இருவர் போட்டியிட் டனர் அதில் உதயசூரியன்  வெற்றி பெற்றார்.

துணைச் செயலாளர் பதவிக்கு இருவர் போட்டியிட்டனர் அதில் சுந்தர் வெற்றிப் பெற்றார்.

பொருளாளர் பதவிக்கு இருவர் போட்டியிட்டனர் அதில் நந்தகுமார் வெற்றிப் பெற்றார்.

செயற்கு ழுவினர்களாக ஐவர்
போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset