நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காதல் உணர்வை நிராகரித்ததால் கோபமடைந்த சந்தேக நபர் மாணவியை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது

பெட்டாலிங்ஜெயா:

காதல் உணர்வை நிராகரித்ததால் கோபமடைந்த சந்தேக நபர் மாணவியை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு மாணவர் இதனை கூறியுள்ளார்.

இங்குள்ள பண்டார் உத்தாமாவில் உள்ள ஒரு பள்ளியில் கத்திக்குத்து சம்பவம் 16 வயது மாணவி மரணமடைந்தார்.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 14 வயது சந்தேக நபர், பாதிக்கப்பட்டவர் தனது உணர்வுகளை நிராகரித்ததால் இவ்வாறு செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

தாக்குதலுக்கு முந்தைய நாள் இரவு சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரிடம் தனது உணர்வுகளை தெரிவித்துள்ளார்.

ஆனால் 16 வயது மாணவி அதே உணர்வு இல்லாததால் அவரை நிராகரித்ததாகவும் கூறினார்.

சந்தேக நபர் பல கூர்மையான பொருட்களைக் கொண்டு, பாதிக்கப்பட்டவரை பெண்கள் கழிப்பறைக்கு பின்தொடர்ந்து சென்று, பின்னர் ஒரு அறையில் தாக்கினார்.

அவர் ஒரு கத்தியை வைத்திருந்தார். பாதிக்கப்பட்டவரை கழிப்பறையில் பிணைக் கைதியாக வைத்திருந்தார்.

பின்னர் அவர் அவளை மீண்டும் மீண்டும் குத்தத் தொடங்கினார் என்று பெயர் குறிப்பிட மறுத்த மாணவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset