நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாணவனின் கைகளில் இருந்து கத்தி, கெராம்பிட் என இரண்டு ஆயுதங்களை போலிசார் கண்டுபிடித்தனர்

பெட்டாலிங்ஜெயா:

மாணவனின் கைகளில் இருந்து கத்தி, கெராம்பிட் என இரண்டு ஆயுதங்களை போலிசார் கண்டுபிடித்தனர்.

பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலிஸ் தலைவர் ஷம்சுடின் மாமாத் கூறினார்.

பண்டார் உத்தாமாவில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் 14 வயது மாணவன் இன்று காலை அதே பள்ளியைச் சேர்ந்த 16 வயது மாணவியை குத்த பயன்படுத்திய ஆயுதத்தை போலிசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

அதில் இரண்டு ஆயுதங்களில் ஒரு கத்தி,  கெராம்பிட் என்று நம்பப்படும் மற்றொரு ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இது நடந்தது.

சந்தேக நபர் பயன்படுத்திய ஆயுதத்தை இதுவரை தனது துறையால் உறுதிப்படுத்த முடியவில்லை.

இந்த நேரத்தில் விரிவான விசாரணை முடியும் வரை சந்தேக நபர் பயன்படுத்திய ஆயுதத்தை எங்களால் இன்னும் கண்டறிய முடியவில்லை.

இதில் பாதிக்கப்பட்டவரின் உடலில் பல கத்திக்குத்து காயங்களும் அடங்கும்.

பிரேத பரிசோதனை அறிக்கைக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்.

விசாரணை முடியும் வரை பொதுமக்கள் ஊகிக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset