நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய முன்னணியை விட்டு வெளியேறுங்கள்: தலைமைத்துவத்திற்கு ஜொகூர் மஇகா முழு அதிகாரத்தையும் வழங்குகிறது: ரவீன் குமார்

கோலாலம்பூர்:

தேசிய முன்னணியில் கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முழு அதிகாரத்தையும் தலைமைத்துவத்திற்கு ஜொகூர் மாநில மஇகா வழங்குகிறது.

ஜொகூர் மாநில மஇகா தலைவர் கே. ரவீன்குமார் இதனை கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜொகூர் மாநில மஇகாவின் ஒரு சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டது.

மேலும் இக்கூட்டத்தில் நாங்கள் கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் ஆகியோரைச் சந்தித்தோம்.

கட்சியின் எதிர்காலம் உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்.

குறிப்பாக ஜொகூர் நிலவரங்களும் விவாதிக்கப்பட்டது.

ஜொகூர் மஇகா கட்சியின் எதிர்காலம் குறித்து சிறந்த முடிவை எடுக்க தலைமைக்கு ஒரு ஆணையை வழங்குவதற்கு ஒப்புக்கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

முன்னதாக, மாநில அரசாங்க ஆட்சிக்குழு உறுப்பினராகவும் இருக்கும் ரவீன்,

பல கட்சிகள் கட்சி அரசியல் சித்தாந்தத்தை விட்டு வெளியேற விரும்பினாலும், வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்ள கொகூர் மஇகா பிஎன் கூட்டணியில் இருக்க விரும்புவதாகக் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset