நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாணவி கொலை வழக்கில் இனவாத கூறு இல்லை; பள்ளிகளில் பாதுகாப்பு நிலை அதிகரிக்கப்பட்டுள்ளது: அமிரூடின் ஷாரி

பெட்டாலிங்ஜெயா:

பண்டார் உத்தாமாவில் மாணவி கொலை வழக்கில் இனவாத கூறுகள் எதுவும் இல்லை.

சிலாங்கூர் மந்திரி புசார் அமிரூடின் ஷாரி இதனை கூறினார்.

இன்று காலை பெட்டாலிங் ஜெயாவின் பண்டார் உத்தாமாவில் உள்ள ஒரு பள்ளியில் ஒரு பெண் மாணவி குத்திக் கொல்லப்பட்ட துயர சம்பவம் நடந்தது.

இதை தொடர்ந்து, சிலாங்கூர் அரசாங்கம் மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பாதுகாப்பு நிலைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கும்.

இந்த வழக்கு இனவாத ரீதியாக தொடர்புடையது அல்ல.

மேலும் பள்ளி பாதுகாப்பு நிலை குறித்து சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஷாசாலி கஹாரைத் தொடர்பு கொண்டதாக அவர்  கூறினார்.

ஒரு மகளையும் கொண்ட ஒரு தந்தையாக, பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் எதிர்கொள்ளும் சூழ்நிலையை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

இந்த கொடூரமான துயரத்தை எதிர்கொள்ள அவர்களுக்கு வலிமையும் பாதுகாப்பும் கிடைக்கட்டும் என்று நான் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உடனடியாக மேம்படுத்துவதை உறுதி செய்வதற்காக, மாநில போலிஸ்படை, கல்வியமைச்சு, உள்ளூர் சமூகத்துடன் நெருக்கமாகச் செயல்படும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset