
செய்திகள் மலேசியா
காசோ ஹவானா திட்டத்தின் கீழ் தமிழ் ஊடகவியலாளர்கள் உட்பட 16 பேருக்கு நிதியுதவி
கோலாலம்பூர்:
மடானி அரசாங்கத்தின் சார்பில் காசோ ஹவானா திட்டத்தின் கீழ் நேற்று மேலும் மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் உட்பட 16 பேருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
பெர்னாமா அலுவலக மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து சிறப்பித்த தகவல் தொடர்பு துறை துணை அமைச்சர் தியோ நிக் சிங் 16 பேருக்கு நிதியுதவி எடுத்து வழங்கினார்.
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தை சேர்ந்த 13 உறுப்பினர்களுக்கு தலா 3,000 வெள்ளி வழங்கப்பட்டது.
இது தவிர இதர ஊடகங்கள் சார்பில் மேலும் 3 பேருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
கடந்த ஓராண்டுக்கு முன்னர் காசோ ஹவானா திட்டத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
நலிவுற்ற மற்றும் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் ஊடகவியலாளர்களுக்கு உதவும் வகையில் காசோ ஹவானா திட்டத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தின் கீழ் மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தை சேர்ந்த 45 உறுப்பினர்களுக்கு இந்த நிதியுதவி கிடைத்துள்ளது என்று துணை அமைச்சர் தியோ நிக் சிங் தெரிவித்தார்.
இதனிடையே மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு காசோ ஹவானா திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கி பேருதவி புரிந்து வரும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தகவல் தொடர்பு துறை அமைச்சர் டத்தோ பாமி பட்சில், துணை அமைச்சர் தியோ நிக் சிங் மற்றும் பெர்னாமா நிறுவனத்திற்கு மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இன்றைய விழாவில் பெர்னாமா தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோ நூருல், பெர்னாமா தலைமை ஆசிரியர் அருள் ராஜூ, மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன், மின்னல் பண்பலை தலைவர் குமரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 14, 2025, 6:27 pm
ஆலய வளாகத்தில் கோழி, ஆடு, மீன் விற்பனை: தெப்ராவ் கெஅடிலான் கண்டனம்
October 14, 2025, 6:25 pm
காதல் உணர்வை நிராகரித்ததால் கோபமடைந்த சந்தேக நபர் மாணவியை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது
October 14, 2025, 5:33 pm
குறைந்த மாணவர்கள் எண்ணிக்கையிலான தமிழ்ப்பள்ளிகள் பாதுகாக்கப்பட வேண்டும்: டத்தோ சிவக்குமார்
October 14, 2025, 4:09 pm
பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை: போலிஸ்
October 14, 2025, 4:08 pm
மாணவி கொலை வழக்கில் இனவாத கூறு இல்லை; பள்ளிகளில் பாதுகாப்பு நிலை அதிகரிக்கப்பட்டுள்ளது: அமிரூடின் ஷாரி
October 14, 2025, 4:06 pm
மக்கள் நலன் மையமாகக் கொண்ட பட்ஜெட்டுக்கான பரிந்துரைகளை பிரதமர் பரிசீலிக்க வேண்டும்.
October 14, 2025, 4:03 pm
மடானி சமூக நல கிளப் அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது: காஜாங் ஆசிரமத்திற்கு தீபாவளி அன்பளிப்பு
October 14, 2025, 1:00 pm