நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மடானி சமூக நல கிளப் அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது: காஜாங் ஆசிரமத்திற்கு தீபாவளி அன்பளிப்பு

காஜாங்:

சமூகநல திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து பல நல்ல சேவைகள் செய்து வரும் மடானி சமூக நல கிளப் கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது.

காஜாங்கில் உள்ள பிரபல உணவக மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் மடானி சமூக நல கிளப் ஆயிரம் பேர் முன்னிலையில் திறப்பு விழா கண்டு சாதனை படைத்தது.
நாடாறிந்த சமூக சேவையாளர் முருகன் தலைமையில் மடானி சமூக நல கிளப் பல வகைகளில் வசதி குறைந்த மக்களுக்கு அளப்பரிய தொண்டாற்றி வருகிறது.

வசதி குறைந்த மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள், சமூக நல இல்லங்களுக்கு உதவிகள் என்று பல வகைகளில் மடானி சமூக நல கிளப் சேவையாற்றி வருகிறது.

தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மடானி சமூக நல கிளப் அமைப்பு மிகப்பெரிய அளவில் நடத்திய விருந்து நிகழ்ச்சியில் 600 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset