நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்கள் நலன் மையமாகக் கொண்ட பட்ஜெட்டுக்கான பரிந்துரைகளை பிரதமர் பரிசீலிக்க வேண்டும்.

கோலாலம்பூர்:

2026ஆம் ஆண்டின் மக்கள் நலன் மையமாகக் கொண்ட பட்ஜெட்டுக்கான பரிந்துரைகளை பிரதமர் பரிசீலிக்க வேண்டும்.


பினாங்கு இந்து இயக்கம் தலைவர் டத்தோ பி. முருகையா கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்  இப்ராஹிம் 2026 ஆண்டிற்கான தேசிய பட்ஜெட்டை அண்மையில் தாக்கல் செய்தார்.

உலகளாவிய பொருளாதார நிலைமை மாறுபாடுகள் காணப்படும் இக்காலகட்டத்தில், 2026 ஆம் ஆண்டிற்கான உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதம் 4% முதல் 4.5% வரை இருக்கும்.

மேலும் 2025 ஆம் ஆண்டில் இருந்த 3.8% நிதி பற்றாக்குறை 2026 ஆம் ஆண்டில் 3.5% ஆகக் குறையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பினாங்கு இந்து இயக்கம், மொத்தம் 470 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டுடன் அறிவிக்கப்பட்டுள்ள இப்பட்ஜெட்டை மலேசியா மடானி கட்டமைப்பின் அடிப்படையில் மக்களை மையமாகக் கொண்டதாகக் காண்கிறது.

இது, மூத்த குடிமக்கள் நலத் திட்டங்கள், பண உதவித் திட்டங்கள், கிக் தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு விரிவாக்கத்தில் அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது.

அரசு சாரா அமைப்பாகிய பினாங்கு இந்து இயக்கம், பெரும்பாலும் மக்களுடன் பணியாற்றி வரும் நிலையில், இத்திட்டங்கள் மற்றும் 2026 பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய வழிமுறைகளை மனமுவந்து வரவேற்கிறது.

எனினும், 2026 பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் விவாதிக்கும் போது, பிரதமரின் கவனத்திற்கு பின்வரும் பரிந்துரைகள் கொண்டு வரப்படுகின்றன.

முதலி அமைப்பு சாரா துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்புத் திட்டம் அமைக்கப்பட வேண்டும்.

இரண்டாவது பி40 பிரிவுக்கானக் குடும்பங்களுக்குச் சூரிய ஒளி மின்பலகை (rooftop solar panel) பொருத்துதல் செலவை அரசு நிதியுதவி செய்ய வேண்டும். மின்சாரத் தள்ளுபடி கிடைத்தாலும், பல குடும்பங்கள் மின் கட்டணத்தைச் செலுத்த முடியாமல், பினாங்கு இந்து இயக்கத்திடம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதற்காக உதவி கோரியுள்ளனர்.

இதன் அடிப்படையில் இந்த உதவி வழங்கப்பட வேண்டும்.

இறுதியாக, லி40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச பள்ளி பேருந்து சேவை வழங்கப்பட வேண்டும்.

பினாங்கு இந்து இயக்கம், 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் கொள்கைகளுடன் மக்களுக்குச் சீரிய பலனை வழங்கும் வகையில் உள்ளது என நம்புகிறது.

இருப்பினும்  மேற்கூறிய பரிந்துரைகள் சேர்க்கப்பட்டால், இப்பட்ஜெட் மேலும் மக்கள் நலனுக்கேற்ப மாறும் என்று டத்தோ முருகையா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset