நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இரண்டாம் படிவ மாணவனால் கத்தியால் குத்தப்பட்ட 4ஆம் படிவ மாணவி மரணம்

பெட்டாலிங்ஜெயா:

இரண்டாம் படிவம் படிக்கும் மாணவனால் கத்தியால் குத்தப்பட்ட 4ஆம் படிவ மாணவி மரணமடைந்துள்ளார்.

பெட்டாலிங் ஜெயாவின் பண்டார் உத்தாமாவில் உள்ள ஒரு பள்ளியில் காலை 9.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது.

இச் சம்பவத்தில் நான்காம் வகுப்பு மாணவி இன்று காலை ஒரு ஆண் மாணவனால் குத்தப்பட்டு இறந்தார்.

 அங்கு சந்தேக நபரான இரண்டாம் படிவ மாணவன் கூர்மையான ஆயுதத்தை பள்ளிக்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

ஆரம்பகட்ட தகவலின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மாணவர் மற்றொரு மாணவரையும் கத்தியால் குத்தியுள்ளார்.

தற்போது, ​​போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலிஸ் தரப்பில் இருந்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset