நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டின் கடன் நெருக்கடி அடுத்துவரும் அரசாங்கத்தைப் பாதிக்கும்: ரபிசி

கோலாலம்பூர்:

நாட்டின் கடன் நெருக்கடி அடுத்தத்தடுத்து வரும் அரசாங்கத்தைப் பாதிக்கும்.

பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லி இதனை கூறினார்.

இந்த ஆண்டு நாட்டிற்கு 15.5 பில்லியன் ரிங்கிட் கூடுதல் வருமானம் கிடைத்தது.

இருந்தாலும் வருமான இடைவெளியைக் குறைக்க அரசாங்கம் தவறியது கவலையை ஏற்படுத்துகிறது.

2026 பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, ​​வரும் ஆண்டுகளில் இந்த சவால் அதிகரிக்கும்.

எனவே, இப்போதிலிருந்து இரண்டு ஆண்டுகளில் யார் அரசாங்கமாக விரும்பினாலும், அரசாங்க வருவாயின் சவால் உண்மையானது தான் என்று அவர் மக்களவையில் கூறினார்.

அதிக அளவிலான கடன் எதிர்காலத்தில் நாட்டிற்கு முதன்மையான அச்சுறுத்தல்.

இது வெளிப்படும் வழிகளில் ஒன்று உள்கட்டமைப்பு திட்டங்கள் மூலம் என்று அவர் விளக்கினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset