நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மனைவியின் பெயரைப் பயன்படுத்தி லட்சக்கணக்கான கடன்களைப் பெறும் அந்நிய நாட்டினர்

பூச்சோங்:

மனைவியின் பெயரைப் பயன்படுத்தி இங்குள்ள அந்நிய நாட்டினர் லட்சக்கணக்கான கடன்களைப் பெற்று வருகின்றனர்.

இந்த நாட்டில் தொழில் செய்வதற்கான
உரிமம் பெறுவதற்காக அவர்கள் உள்ளூர் பெண்களை திருமணம் செய்து கொள்கின்றனர்.

மேலும் மனைவியின் குடியுரிமையைப் பயன்படுத்தி லட்சக்கணக்கான ரிங்கிட் கடன்கள் பெறுகின்றனர்.

பூச்சோங் பத்து 12 இல் உள்ளூர் பெண்களின் உரிமத்தின் பேரில் தொழில்களை நடத்தும் ஓப் மாஹிரில் சில வெளிநாட்டினர் பயன்படுத்திய தந்திரம் கண்டறியப்பட்டது.

39 வயதுடைய பாகிஸ்தானிய நபர் ஒருவர், 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு உள் நாட்டுப் பெண்ணை மணந்துள்ளார்.

இப்போது தனது மனைவியின் பெயரில் உள்ள வணிக உரிமத்தைப் பயன்படுத்தி தளவாடங்கள்,  மின்சாரப் பொருட்கள் வணிகத்தை நடத்தி வருவதாகவும் ஒப்புக்கொண்டார்.

இருப்பினும், இந்த நாட்டில் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வதற்காக மட்டுமல்ல.

தனது 45 வயது மனைவி, அவர்களது இரண்டு குழந்தைகளுக்கு மிகவும் வசதியான வாழ்க்கையை வழங்குவதற்காக ஒரு கணவனாக தனது பொறுப்பிலிருந்து இந்த வணிகம் செய்ததாக அவர் கூறினார்.

நான் என் மனைவியின் பெயரைப் பயன்படுத்தாவிட்டால், நான் ஒரு தொழிலை நடத்த முடியாது.

இப்போது நான் என் மனைவியுடன் வேலை செய்கிறேன். ஏனென்றால் அவளே இவை அனைத்திற்கும் சொந்தக்காரர்.

வீடு, வணிகத்திற்காக நாங்கள் 200,000 ரிங்கிட் கடன் வாங்கியுள்ளோம். 

நாங்கள் நிலம் வாங்கி ஒரு வீட்டைக் கட்டினோம். இது எங்கள் வணிகப் பொருட்களை சேமிக்க ஓர் இடமாகவும் பயன்படுத்தப்படுகிறது என்று அவர் அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

தலைநகர் ஜாலன் மஸ்ஜித் இந்தியா அருகில் அமைந்துள்ள சிட்டி ஒன் பிளாசாவில் இருக்கும் பல பாகிஸ்தானியர்கள் உள் நாட்டுப் பெண்களை மணமுடித்து கடன் பெற்று வியாபாரம் செய்கிறார்கள். பெரும்பாலோருக்கு பாகிஸ்தானிலும் ஒரு குடும்பம் இருக்கிறது. தொழில் நட்டமடைந்தால் உள் நாட்டுப் பெண்ணைக் கைகழுவி விட்டுவிட்டு சொந்த நாட்டிற்கோ அல்லது வேறு நாட்டிற்கோ சென்றுவிடுகின்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset