நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வான் சைஃபுல் நீக்கப்பட்டதுடன் வான் ஃபைசால் இடைநீக்கம் செய்யப்பட்டார்: பெர்சத்து அதிரடி

கோலாலம்பூர்:

தாசேக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர்  வான் சைஃபுல் வான் ஜான் பெர்சத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

மேலும் வான் அஹ்மத் ஃபைசால் அவரது உறுப்பினர் பதவியில் இருந்து ஒரு முறை இடைநீக்கம் செய்யப்பட்டார்.

வான் சைஃபுல், வான் அஹ்மத் ஃபைசால் ஆகியோர் உட்பட மொத்தம் ஆறு பேர் பெர்சத்து கட்சியின் விதிகளை மீறியதற்காக கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

ஹாங் துவா ஜெயா பிரிவைச் சேர்ந்த முஹம்மத் அஸ்ருதின் முஹம்மத் இட்ரிஸ், முஹம்மத் ஃபைசல் அஸ்மர் (பெங்கராங்), முஹம்மத் ஃபாட்லி இஸ்மாயில் (ஈப்போ திமூர்), முஹம்மத் இசா முஹம்மத் சைடி (அம்பாங்) ஆகிய நால்வரும் நடவடிக்கைக்கு உட்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள்.

பெர்சத்து ஒழுங்குமுறை வாரியத்தின் கூற்றுப்படி, 

கட்சியின் சட்டம்,  நடத்தை விதிகளை மீறுவது தொடர்பாக ஒரு உறுப்பினரிடமிருந்து எழுத்துப்பூர்வ புகாரைப் பெற்ற பிறகு அவர்கள் மீது விசாரணை நடத்தி தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset