நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 16 முதல் இணையவழி கல்வியைத் தொடர உயர் கல்வி மாணவர்களுக்கு அனுமதி

கோலாலம்பூர்:

தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 16 முதல்  இணைய கல்வியை தொடர உயர் கல்வி மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உயர்கல்வி அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை தெரிவித்தது.

வரும் அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படவுள்ளது. தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 16 முதல் 24 வரை இந்து மாணவர்கள்,  ஆசிரியர் ஊழியர்களுக்கு இணைய கற்றல், கற்பித்தலை செயல்படுத்த அனைத்து பொது உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதி உயர் கல்விக் கூட ஊழியர்கள் அக்டோபர் 20 ஆம் தேதி தங்கள் குடும்பங்களுடன் இணக்கமான, அர்த்தமுள்ள சூழ்நிலையில் பண்டிகையைக் கொண்டாட அனுமதிக்கிறது.

தீபாவளி விழாவைக் கொண்டாட இந்த வசதி பொதுப் பல்கலைக்கழகங்கள், பாலிடெக்னிக் கல்லூரிகள் சமூகக் கல்லூரிகளை இது  உள்ளடக்கியது.

இணைய கற்றல், கற்பித்தல் கல்வியை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் கல்வித் திட்டங்களின் பொருத்தம், தேவைகளைப் பொறுத்து இந்த நடவடிக்கையை செயல்படுத்துவது இருக்கும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset