நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமருடன் எந்த பிரச்சினையும் இல்லை; தேமு தலைவருடன் தான் எங்களுக்கு பிரச்சினை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடம் மஇகாவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை

தேசிய முன்னணி தலைவருடன் தான் எங்களுக்கு பிரச்சினை என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ  விக்னேஸ்வரன் கூறினார்.

தேசிய முன்னணியில் இருந்து விலகி மஇகா தேசியக் கூட்டணியில் இணைவது குறித்து பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலை கட்சியின் எதிர்காலம் குறித்து தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி எங்களுடன் பேசி வருவதாக கூறியுள்ளார்.

அவரின் இந்த கூற்று எனக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் தந்தது.

காரணம் அவரை சந்தித்து பல ஆண்டுகளாகி விட்டது என்று அவர் கூறினார்.

தேசிய முன்னணியின் உறுப்பு கட்சியான மஇகாவுக்கு எப்போது குரல் கொடுப்பதுடன் ஆதரவாக இருக்க வேண்டியது அக்கூட்டணியின் பொறுப்பாகும்.

ஆனால் பல கட்டங்களில் தேசிய முன்னணி மஇகாவை கழற்றி விட்டது.

இதனால் தான் நாங்கள் தொடர் அதிருப்தியில் உள்ளோம்.

பிரதமருக்கும் மஇகாவுக்கும் எந்த பிரச்சினையுன் இல்லை.

எங்களின் நேரடி பிரச்சினை தேசிய முன்னணி தலைவருடன் தான். இதில் மறைக்க ஒன்றும் இல்லை என்று அவர் கூறினார்.

மஇகாவின் எதிர்கால அரசியல் பாதை குறித்து விரைவில் முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் உள்ளோம்.

இந்த விவகாரத்தில் நான் சுயேட்சையாக முடிவெடுக்க மாட்டேன்.

ஒட்டுமொத்த கட்சி தான் முடிவெடுக்கும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset