நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இன்ஃப்ளூயன்ஸாவைத் தடுக்க அனைத்து உயர் கல்விக் கூடங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜம்ரி

கோலாலம்பூர்:

மலேசியாவில் பரவிவரும் இன்ஃப்ளூயன்ஸாவைத் தடுக்க அனைத்து  உயர் கல்விக் கூடங்களும் உரிய  நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

உயர் கல்வியமைச்சர் டத்தோஸ்ரீ ஜம்ரி அப்துல் காடிர் இதனை தெரிவித்தார்.

அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் (HEIs) மாணவர்களிடையே இன்ஃப்ளூயன்ஸா பரவுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க நினைவூட்டப்படுகின்றன.

இன்ஃப்ளூயன்ஸா பரவலை இலகுவாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும், முன்னேற்றங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் உயர்கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உயர் கல்விக் கூடங்களில்  இன்ஃப்ளூயன்ஸா பரவுவது குறித்து இதுவரை எந்த தகவலும் தனது அமைச்சுக்கு கிடைக்கவில்லை.

இருந்தாலும் இன்ஃப்ளூயன்ஸா பரவலை இலகுவாக எடுத்துக் கொள்ளவில்லை. 

அமைச்சு முன்னேற்றங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

நாங்கள் ஏற்கனவே அறிந்தபடி, இந்த நோய் பள்ளிகளையும் உள்ளடக்கியிருக்கலாம்.

ஆனால் நாங்கள் அதை எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் சர்வதேச இளம் எதிர்காலத் தலைவர்கள் உச்ச நிலை மாநாட்டின் நிறைவு விழாவிற்கு பின் அவர் செய்தியாளர்களிடம் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset