நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழ்நாடு அரசு வழங்கும் வெளிநாடுவாழ் தமிழர்களுக்கான NRT நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் 2025

கோலாலம்பூர்:

தமிழ்நாடு அரசு அயலகத் தமிழர் நலன், மறுவாழ்வு ஆணயரகம் வாரியம் NRT நலத்திட்ட உறுப்பினர் சிங்கப்பூர் டாக்டர் ராமின் வழிகாட்டுதலின் கீழ்,
மலேசியாவில் வசிக்கும் வெளிநாடுவாழ் தமிழர்களின் நலனுக்காக செயல்படும் வெளிநாடுவாழ் தமிழ் இந்தியர்கள் சங்கம் (NRTIA) மலேசியா, தலைவர் MSB.பிர்தௌஸ் கானின் தலைமையில்,
வெளிநாடு வாழ் தமிழர்கள் நல வாரியம் மேற்கொண்டு வரும் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வு, தமிழ் எக்ஸ்பேட்ஸ் மன்றம் (Tamil Expats Mandram – TEM) ஏற்பாடு செய்திருந்த தீபாவளி திருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அக்டோபர் 5ஆம் தேதி,  கோலாலம்பூரில் நடைபெற்றது.

சுமார் 200-க்கும் மேற்பட்ட தமிழ் தொழில்முறை குடும்பங்கள் NRTIA அரங்கிற்கு வருகை தந்து, தமிழ்நாடு அரசு வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக வழங்கும் NRT அடையாள அட்டை, காப்பீடு, நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைப் பற்றி ஆர்வத்துடன் கேட்டறிந்தனர்.

இந்த விழிப்புணர்வு முகாம், வெளிநாடு வாழ் தமிழர்கள் தங்கள் உரிமைகள், நலன்கள், தமிழ்நாடு அரசின் ஆதரவு முயற்சிகளைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகித்தது.

நிகழ்வின் முடிவில், NRTIA மலேசியா சார்பாக, இந்த முயற்சிக்கு ஆற்றிய அர்ப்பணிப்புக்கும் ஒத்துழைப்பிற்கும் தமிழ் எக்ஸ்பேட்ஸ் மன்றத்தின் தலைவர் விஜய் ஆனந்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும் தகவல்களுக்கு: வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கம் (NRTIA) மலேசியா தலைவர் MSB.பிர்தௌஸ் கானுடன் பின்வரும் எண்ணில் அல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
0125480786
nrtiamalaysia@gmail.com

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset