நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தியர்களுக்கு நல்லது செய்தால், அது எந்த அரசாங்கமாக இருந்தாலும் மஇகா ஆதரிக்கும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்:

இந்தியர்களுக்கு நல்லது செய்தால், அது எந்த அரசாங்கமாக இருந்தாலும்
மஇகா முழுமையாக ஆதரிக்கும்.

மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் இதனை கூறினார்.

2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கடந்த வெள்ளிக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்தார்.

இதில் குவாந்தான் ஜெராம் தோட்ட தமிழ்ப்பள்ளி புதிதாக கட்டப்படும் என அவர் அறிவித்தார்.

டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பிரதமராக இருந்த போது பல புதிய தமிழ்ப்பள்ளிகளை கட்டினார்.

பல பள்ளிகளை புதுபித்ததுடன் நிதிகளை வாரி வழங்கினார்.

அதே போன்று தான் தற்போதைய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரும் செய்ய தொடங்கியுள்ளார்.

எது எப்படி இருந்தாலும் இந்த உதவிகள் நம் இந்திய சமுதாயத்தை தான் சென்றடைகிறது.

அதன் அடிப்படையில் இந்தியர்களுக்கு நல்லது செய்தால், அது எந்த அரசாங்கமாக இருந்தாலும் மஇகா ஆதரிக்கும்.

அது கிளந்தானில் பாஸ் அரசாங்கமாக இருந்தாலும் மஇகாநிச்சயம் ஆதரிக்கும்.

மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset