நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தீபாவளியை முன்னிட்டு 27,000 வசதிக் குறைந்த குடும்பங்களுக்கு உதவிப் பொருட்களை மஇகா வழங்கியது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்:

தீபாவளியை முன்னிட்டு 27,000 வசதிக் குறைந்த குடும்பங்களுக்கு உதவிப் பொருட்களை மஇகா வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் இப்பொருட்கள் வழங்கப்பட்டது என்று மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

மஇகா அரசாங்கத்தில் இல்லை என்றாலும் மக்களுக்கான உதவிகளை மஇகா நிறுத்தியது இல்லை.

இதன் அடிப்படையில் தான் வசதிக் குறைந்த மக்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டது.

கிட்டத்தட்ட 25,000 முதல் 27,000 பேருக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டன.

இதுவொரு சின்ன உதவியாக இருந்தாலும் தீபாவளி விழாவின் போது வசதிக் குறைந்த மக்களுக்கு  இது அர்த்தமுள்ள உதவியாகும்.

அவ்வகையில் இன்று மஇகா மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டவர்களுக்கும் தீபாவளி உதவிப் பொருட்களும் அன்பளிப்புகளும் வழங்கப்பட்டது.

கெமேலே சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி தலைமையிலான மஇகா மகளிர் பிரிவின் இம்முயற்சி பாராட்டுக்குரியது என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

முன்னதாக ஏறக்குறைய 120 பெண்களுக்கு தீபாவளி அன்பளிப்பு வழங்கலாம்  என திட்டமிட்டோம்.

ஆனால் தேசியத் தலைவரின் ஆலோசனையின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை 500ஆக மாறியது.

மேலும் கூட்டரசுப் பிரதேசம், சிலாங்கூர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த  500 பெண்களை அடையாளம் கண்டு இன்று உதவிகள் வழங்கப்பட்டது.

அதே வேளையில் பிள்ளைகளுக்கும் அன்பளிப்புகள் வழங்கப்பட்டது.

இந்த உதவிகள் வசதிக் குறைந்த மக்களுக்கு பயனளிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளதாக மஇகா மகளிர் பிரிவுத் தலைவர் என். சரஸ்வதி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset