நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஊழலை எதிர்த்துப் போராடுங்கள்; துணிச்சலான அமலாக்க அதிகாரிகளை நான் பாதுகாப்பேன்: பிரதமர் அன்வார்

புத்ராஜெயா:

ஊழலை எதிர்த்துப் போராடும் துணிச்சலான அமலாக்க அதிகாரிகளை நான் முழுமையாக பாதுகாப்பேன்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்க நிறுவனங்களுக்கு அதிகாரமும் உத்தரவாதமும் அளிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் முக்கிய நபர்களை உள்ளடக்கியிருந்தாலும் கூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேசிய நலனுக்காக ஊழல்வாதிகளுக்கு எதிராக அமலாக்க நிறுவனங்கள் எடுக்கும் நடவடிக்கையைப் பாதுகாக்க எதையும் பணயம் வைப்பேன்.

ஊழலுக்கு எதிரான அமலாக்கத்தைப் பொறுத்தவரை, சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு, குறிப்பாக முக்கிய நபர்களுக்கு எதிரான அமலாக்க அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைகள், தலைமையால் பாதுகாக்கப்படுமா என்பது குறித்த அமலாக்க அதிகாரிகளின் கவலைகளை அவர் அறிந்திருப்பதாக அவர் கூறினார்.

ஆனால் என்னை பொறுத்தவரையில் ஆதாரங்கள் இருக்க வேண்டும் துன்புறுத்தல் இருக்கக்கூடாது.

நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றால் அது உறுதியான, கடினமானமாக இருக்க வேண்டும்.

2025 அக்டோபர் மாதத்திற்கான பிரதமர் துறை ஊழியர்களுடநான சந்திப்பின் போது பிரதமர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset