நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் சந்தேக நபர்கள் சிறார்களாக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்: அசாலினா

புத்ராஜெயா:

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் சந்தேக நபர்கள் சிறார்களாக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்.

பிரதமர் துறையின் சட்டப் பிரிவு அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஒத்மான் கூறினார்.

மலாக்காவில் உள்ள ஒரு இடைநிலைப் பள்ளியில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு இலக்கானார்.
இந்த வழக்கில் சந்தேக நபருக்கு தண்டனைச் சட்டத்தின்படி தண்டனை வழங்கப்படும்.

சந்தேக நபர் 18 வயதுக்குட்பட்டவர் என்பது சந்தேக நபர் எந்தவொரு நடவடிக்கையிலிருந்தும் தப்பிக்க ஒரு தகுதியல்ல. 

சம்பவம் நடந்த நேரத்தில் குற்றவாளியின் வயதைப் பொறுத்து தனி நீதிமன்றங்களில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படலாம்.

18 வயதுக்குட்பட்ட குற்றவாளிகள் குற்றம் செய்தால் அவர்கள் விடுதலையாகலாம் என்பது அல்ல. 

இது பலருக்கு ஒரு தவறான புரிதலை ஏற்படுத்தும்.

ஆக யாராக இருந்தாலும் உரிய தண்டனைகள் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset