நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்: நஜிப்பிற்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது

கோலாலம்பூர்:

சாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து நஜிப்பிற்கு எதிரான எஸ்ஆர்சியின் 42 மில்லியன் ரிங்கிட் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு எதிரான எஸ்ஆர்சியின் 42 மில்லியன் ரிங்கிட் வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இஹ்சான் பெர்டானா நிர்வாக இயக்குநர் ஷம்சுல் அன்வர் சுலைமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் இன்று அவர் ஆஜராகவில்லை.

எஸ்ஆர்சி இன்டர்நேஷனலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் குவான் வில் சென் இதனை நீதிபதி ராஜா அகமது மொஹ்சானுதீன் ஷா ராஜா மொஹ்சானிடம் தெரிவித்தார்.

நேற்று மாலை, எங்களுக்கு ஒரு மருத்துவ விடுப்புச் சான்றிதழும், அவர் இன்ஃப்ளூயன்ஸா ஏ காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைக் காட்டும் படமும் வழங்கப்பட்டது.

அவரது இதயத்தில் சிக்கல்கள் இருக்கலாம் என்ற கவலைகள் உள்ளன.
எனவே அவர் ஒரு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார் என்று அவர் கூறினார்.

இதை செவிமடுத்த நீதிபதி இந்த வழக்கு விசாரணை நவம்பர் 6ஆம் தேதி தொடரும் என அறிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset