நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பூட்டிய அறையில் எஸ்பிஎம் மாணவி இறந்து கிடந்தார்

ஜெலுபு:

எஸ்பிஎம் தேர்வுக்கு தயாராகி வந்த ஒரு பெண் மாணவி, கடந்த சனிக்கிழமை இரவு இங்குள்ள கோல கிளாவாங்கில் உள்ள ஒரு வீட்டில் இறந்து கிடந்தார்.

நெகிரி செம்பிலான் போலிஸ் தலைவர் டத்தோ அல்சாஃப்னி அஹ்மது இதனை கூறினார்.

17 வயது இளம் பெண் தனது வீட்டில் உள்ள ஓர் அறையில் இறந்து கிடந்ததாக அவர் மேலும் கூறினார்.

சனிக்கிழமை இரவு சுமார் 11.50 மணியளவில், கோலா கிளாவாங் போலிஸ் நிலைய புகார் மையத்திற்கு ஜெலுபு மருத்துவமனையின் மருத்துவ அதிகாரியிடமிருந்து ஓர் அழைப்பு வந்தது.

அப்போது அம் மாணவியின் மரணம் குறித்து புகார் கிடைத்தது.

தரை வீட்டின் முதல் அறையில் கதவு உள்ளே இருந்து பூட்டப்பட்ட நிலையில், மாணவி இறந்து கிடைந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக முதற்கட்ட  விசாரணையில் கண்டறியப்பட்டது.

இறந்தவரின் உடலை மேலும் பரிசோதித்ததில், போராட்டத்தின் அறிகுறிகள் அல்லது குற்றச் செயல்களின் அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.
இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தின் உணர்திறனை ஏற்படுத்தக்கூடிய சரிபார்க்கப்படாத தகவல்களை ஊகிக்கவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்று போலிஸ் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset