நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

வகுப்பறையில் நுழைந்து மாணவரைத் தாக்கிய சிறுத்தைக்குட்டி 

அலிகர்:

மாணவர்கள் மட்டும்தான் வகுப்பறைக்குச் சென்று கல்வி கற்கலாமா?
நானும் செல்வேன் என்றது ஒரு சிறுத்தை.

இந்தியாவின் வடக்குப் பகுதியில் உள்ள அலிகார் (Aligarh) நகரின் பள்ளியொன்றில் நுழைந்த அந்தச் சிறுத்தை அங்குள்ள மாணவர் ஒருவரைத் தாக்கியது.

அவர் சிறு காயங்களுடன் தப்பியுள்ளார். 

Leopard Strays Into Aligarh Classroom

வகுப்பறையில் ஒளிந்துகொண்டிருந்த சிறுத்தையைக் கண்டதும் வெளியே ஓடியதாக மாணவர் குறிப்பிட்டார்.

5 வயதாகும் அந்தச் சிறுத்தையை மயக்கமடையச் செய்து பிடிப்பதற்கு 11 மணி நேரமானதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

அருகிலுள்ள காட்டிலிருந்து அந்தச் சிறுத்தை பள்ளிக்குச் சென்றிருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் கூறினர்.

வனவிலங்குகளின் வசிப்பிடம் சுருங்கிக்கொண்டு இருப்பதால் அவை உணவுதேடி கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் செல்வதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் 12,000க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset