நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விரைவு பேருந்து விளம்பர பதாகையின் கம்பத்தை மோதி விபத்து: ஒருவர் உயிரிழந்தார்

ஸ்ரீ கெம்பாங்கான்:

விரைவு பேருந்து விளம்பர பதாகையின் கம்பத்தை மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தர்.

இந்த சம்பவம் ஸ்ரீ கெம்பங்கான் அருகே வடக்கு நோக்கிச் செல்லும் வடக்கு-தெற்கு விரைவுச் சாலையின் 293.4 கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.

இச்சம்பவத்தில் விரைவு பேருந்து சறுக்கி விளம்பர பதாகையின் கம்பத்தை மோதி விபத்துக்குள்ளானது.
இன்று அதிகாலை 2.57 மணிக்கு இச்சம்பவம் குறித்து அழைப்பு வந்தது.

பாங்கி தீயணைப்பு, மீட்பு நிலையத்தின்  பணியாளர்கள் குழு, ஸ்ரீ கெம்பங்கன், கேஎல்ஐஏ குழு உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத் துறை செயல்பாட்டு மையம் தெரிவித்தது.

இந்த விரைவுப் பேருந்தில் பேருந்து ஓட்டுநர் உட்பட 19 பேர் இருந்தனர்.

இதில் 59 வயதான உள்ளூர்வாசி ஒருவர் சிக்கிக் கொண்டு இறந்துவிட்டதாக சுகாதார அமைச்சகத்தால் உறுதிப்படுத்தப்பட்டது.

அதே நேரத்தில் 18 பேர் காயமடைந்து அந்த இடத்தில் ஆரம்ப சிகிச்சை பெற்றனர் என்று அம்மையம் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset