நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரெஸ்மாவின் புதிய தலைவராக டத்தோ மோசின் தேர்வு; முஹிபுல்லா கான் துணைத் தலைவரானார்

கோலாலம்பூர்:

பிரெஸ்மாவின் புதிய தலைவராக டத்தோ முகமத் மோசின் தேர்வான வேளையில் முஹிபுல்லா கான் துணைத் தலைவரானார்.

பிரெஸ்மா எனப்படும் மலேசிய இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் 21ஆவது ஆண்டுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

தேர்தல் ஆண்டு என்பதால் கூட்டம் பரபரப்பாக நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின் 2025 முதல் 2028ஆம் ஆண்டுக்கான நிர்வாகக் குழு தேர்தல் நடைபெற்றது.

இதில் டத்தோ முகமத் மோசின் பிரெஸ்மாவின் புதிய தலைவராக ஏற்கெனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து துணைத் தலைவர் பதவிக்கு முகமத் ராஃபிக், முஹிபுல்லா கான் இடையே கடுமையான போட்டி நிலவியது.

இதில் முஹிபுல்லா கான் 425 வாக்குகளை பெற்று சங்கத்தின் புதிய துணைத் தலைவரானார்.

5 உதவித் தலைவர் பதவிக்கு 6 பேர் போட்டியிட்டனர்.

இதில் சைட் அப்தாஹிர், சிராஜுடின், அப்துல் ஹமித், பயாலுடின், முகமத் ரசாலி ஆகியோர் உதவித் தலைவர்களாக வெற்றி பெற்றனர்.

சங்கத்தின் செயலாளராக
ஹபிபூர் ரஹ்மானும் பொருளாளராக நஷார்டினும் தேர்வு பெற்றனர்.

ஷாகுல் ஹமித், ஷேக் ஷாமிர், ஜாவா புடின், முகமத் நஸ்ரின் ஏஹ்சான், ஷாகுல் ஹமித் யாக்கோப், அப்துல் காடிர், அப்துல் ஹஜிஸ், முகமத் தன்வீர், அல் அலிம், முகமத் அசார், அமமாட் பசீர் ஆகியோர் நிர்வாக குழு உறுப்பினர்களாக தேர்வு பெற்றனர்.

புதிய தலைமைத்துவத்தின் கீழ் பிரெஸ்மா தற்போது செயல்படவுள்ளது.

பிரெஸ்மாவை இன்னும் வலுப்படுத்த வேண்டும். பிரெஸ்மா இன்னும் வலுவாக வேண்டும்.

குறிப்பாக உறுப்பினர்கள் எதிர்நோக்கும் அந்நிய தொழிலாளர்கள் உட்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் உரிய நடவடிக்கை எடுப்பதே எங்களின் இலக்கு என்று டத்தோ மோசின் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset