நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

7 ஹரிமாவ் மலாயா வீரர்களின் குடியுரிமை; அனைத்து அரசியலமைப்பு நடைமுறைகளையும் பின்பற்றுகிறது: சைபுடின்

கோலாலம்பூர் -
ஏழு ஹரிமாவ் மலாயா வீரர்களின் குடியுரிமை நிலை அனைத்து அரசியலமைப்பு நடைமுறைகளையும் பின்பற்றுகிறது.

உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இதனை கூறினார்.

மத்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நடைமுறைகளின்படி ஏழு ஹரிமாவ் மலாயா வீரர்களின் குடியுரிமை மூலம் குடியுரிமை அந்தஸ்து வழங்கப்பட்டது.

மத்திய அரசியலமைப்பின் பகுதி 3 இன் இரண்டாவது அட்டவணையின் பிரிவு 19, பிரிவு 20(1)(இ) இல் உள்ள விதிகளை பரிசீலித்த பிறகு இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இது ஒரு விண்ணப்பதாரர் நாட்டில் ஒரு நாள் மட்டுமே இருந்திருந்தாலும் கூட, வதிவிடக் காலத்தை பூர்த்தி செய்ததாகக் கருத அமைச்சருக்கு விருப்புரிமை அதிகாரத்தை வழங்குகிறது.

2018 முதல் வீரர்கள் குடியுரிமை பெறுவது குறித்த புள்ளிவிவரங்கள் அரசாங்கம் அல்லது மலேசிய கால்பந்து சங்கம் வீரர்களை குடியுரிமை பெற தீர்மானிக்கும் செயல்பாட்டில் பயன்படுத்தும் தகுதிகள்  அளவுகோல்கள் குறித்து கங்கார் நாடாளுமன்ற உறுப்பினர் ஜாக்ரி ஹாசன் கேட்ட கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset