நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டில் அக்டோபர் நிலவரப்படி 3,141 உணவகங்கள் ரஹ்மா உணவுத் திட்டத்தை தொடர்கின்றன: ஃபுசியா

கோலாலம்பூர்:

நாட்டில் அக்டோபர் 2025 நிலவரப்படி  3,141 உணவகங்கள் ரஹ்மா உணவுத் திட்டத்தை தொடர்கின்றன.

உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவின துணையமைச்சர் டத்தோ டாக்டர் ஃபுசியா சாலே இதனை தெரிவித்தார்.

மக்களின் வாழ்க்கைச் செலவினத்தை குறைக்கும் நோக்கில் உணவகங்களில் ரஹ்மா உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.

தற்போது நாடு முழுவதும் மொத்தம் 3,141 பதிவு செய்யப்பட்ட உணவு வளாகங்கள் அக்டோபர் மாத நிலவரப்படி இந்த உணவுத் திட்டத்தை வழங்குகின்றன.

அமைச்சின் பாயோங் ரஹ்மா நிகழ்ச்சி நிரலின் கீழ் ஜனவரி 2023இல் தொடங்கப்பட்ட இந்த முயற்சி,

உணவக உரிமையாளர்களிடம் இருந்து தொடர்ந்து வலுவான ஆதரவைப் பெற்று வருகிறது.

உணவக உரிமையாளர்களின் ஆதரவு தொடரும் பட்சத்தில் இத்திட்டமும் தொடரும்.

இத்திட்டத்திம் வாயிலாக வசதிக் குறைந்த மக்களுக்கு தரமான உணவு கிடைக்கும்.
குறிப்பாக பி40 மக்களின் வாழ்க்கை செலவினத்தை குறைக்கும்.

பிரெஸ்மாவின் 21ஆவது ஆண்டுக் கூட்டத்தை தொடக்கி வைத்து பேசிய துணையமைச்சர் இவ்வாறு கூறினார்.

ரஹ்மா உணவுத் திட்டத்திற்கு பிரெஸ்மாவும் அதன் உறுப்பினர்களும் முழு ஆதரவை வழங்கினர்.

லாபத்தை காட்டிலும் மக்களின் நலனையும் சுமையையும் கருத்தில் கொண்டு அவர்கள் இந்த ஆதரவை வழங்கி வருகின்றனர்.

இவ்வேளையில் பிரெஸ்மாவுக்கு நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன் என அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset