நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ராஃபா எல்லையை மீண்டும் திறக்க முன்மொழிய எகிப்திய அதிபரை தொடர்பு கொள்வேன்: பிரதமர்

புக்கிட்ஜாலில்:

ராஃபா எல்லையை மீண்டும் திறக்க முன்மொழிய  எகிப்திய அதிபரை தொடர்பு கொண்டு பேசுவேன்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக மலேசியா ஒரு புதிய உத்தியை வகுக்கும்.

அதில் எகிப்தின் ராஃபா வழியான தரைவழிப் பாதையும் அடங்கும்.

காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா (ஜிஎஸ்எப்) கப்பல் இஸ்ரேலியப் படைகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.

இதை தொடர்ந்து, பாலஸ்தீன நிலத்தில் சியோனிச ஆட்சியின் சுவரை உடைக்கும் முயற்சியில் மலேசியா மேற்கொள்ளும் முயற்சிகளில் இந்த உத்தியும் அடங்கும்.

சுமுத் நுசந்தரா மனிதாபிமானப் பணியின் இரண்டாவது அலையை அடைய, அனைத்து இராஜதந்திர வழிகளையும் பயன்படுத்த வேண்டும்.

அதில் எகிப்திய அதிபர் அப்துல் ஃபத்தா அல்-சிசியைத் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்துவதும் அடங்கும்

இதனால் ராஃபா பாலஸ்தீனத்திற்கு நுழைவாயிலாக அனுமதிக்கப்படுவார் என்று பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset