நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் முன்மொழிவுகள் மாமன்னரிடம் சமர்ப்பிக்கப்பட்டது

கோலாலம்பூர்:

2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் முன்மொழிவுகள் மாட்சிமை தங்கிய

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை மக்களவையில் தாக்கல் செய்யவுள்ளார்.

இந்நிலையில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இந்த உத்தேச பட்ஜெட் 2026இன் சமர்ப்பணத்தைப் பெற ஒப்புதல் அளித்தார்.
சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரின் முகநூலில் ஒரு பதிவின்படி,

இந்த ஆவணத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இங்குள்ள இஸ்தானா புக்கிட் துங்குவில் மாமன்னரிடம் வழங்கினார்.

பிரதமர் நேற்று புத்ராஜெயாவில் ஊடக ஆசிரியர்களுக்கு 2026 பட்ஜெட் குறித்து விளக்கமளிக்கும் போது, ​​நான்காவது மடானி அரசாங்க பட்ஜெட் மக்களைப் பாதுகாப்பதற்கும், பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும், நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நாட்டின் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கும் கவனம் செலுத்தும் என்று கூறினார்.

பிரதமர் நாளை மாலை 4 மணிக்கு மக்களவையில் பட்ஜெட் மசோதாவை 2026 ஐ தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset