நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அம்னோ சொந்த அரசியல் உயிர்வாழ்வில் கவனம் செலுத்துவதால் தேசிய முன்னணியில் இருந்து மஇகா வெளியேறலாம்?

கோலாலம்பூர்:

அம்னோ சொந்த அரசியல் உயிர்வாழ்வில் கவனம் செலுத்துவதால் தேசிய முன்னணியில் இருந்து மஇகா வெளியேறலாம்.

மஇகாவின் கட்சி வட்டாரங்கள் இதனை கோடி காட்டியுள்ளன.

வரவிருக்கும் பொதுத் தேர்தலில் தேசியக் கூட்டணியுடன் இணைந்து பணியாற்ற மஇகா தேசிய முன்னணியை விட்டு வெளியேறும் என்று கூறப்படுகிறது.

இது மஇகாவின்.இருண்ட சுரங்கப்பாதையின் முடிவில் ஏற்படும் வெளிச்சமாக பார்க்கப்படுகிறது.

அம்னோ இப்போது தனது சொந்த அரசியல் உயிர்வாழ்வில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது.

இதனால் அதன் பாரம்பரிய கூட்டாளிகளான மஇகா, மசீச கட்சிகளை தனியாகப் போராட விட்டுவிட்டது.

ஆக மஇகா தேசிய முன்னணியில் தனது நிலைப்பாடு இனி நிலைநிறுத்த முடியாதது என்று நம்புகிறது.

உதாரணமாக அம்னோ தனது நீண்டகால கூட்டாளிகளான மஇகாவின் ஆதரவைத் தக்கவைத்துக்கொள்வதில் தீவிரமாக இருந்திருந்தால்,

மஇகா, மசீசவுக்கு இரண்டு அமைச்சர் பதவிகளை வழங்கியிருக்க வேண்டும்.

மேலும் மஇகா, தேசிய முன்னணியுடன் ஒரு முட்டுச் சந்தையை அடைந்துவிட்து என என்று என்று அந்த வட்டாரங்கள் கூறியது.

16ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிட மஇகாவுக்கு அதிக இடங்கள் வழங்கப்படாது என்று தலைவர்கள் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டு 15ஆவது பொதுத்  தேர்தலில், மஇகா 11 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டது.

ஆனால் தாப்பாவைத் தவிர மற்ற அனைத்திலும் தோல்வியடைந்தது.

இதனால் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் மக்களவையில் கட்சியின் ஒரே பிரதிநிதியாக உள்ளார்.

அந்த இடங்களில் பெரும்பாலானவற்றை வென்ற ஜசெக, கெஅடிலான் கட்சிகளில் அவற்றை மஇகா திருப்பி கொடுக்கும் அளவுக்கு தாராளமாக இருக்க வாய்ப்பில்லை.

கூட்டணிக் கட்சியாக மாறிய மஇகா, 2008 பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை இழந்ததிலிருந்து அதன் செல்வாக்கு கணிசமாகக் குறைந்துள்ளதாக அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஆக தற்போதைய சூழ்நிலையில், இந்திய சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதில் பொருத்தமானவராக இருக்க, கட்சிக்கு சிறந்த வழி தேசியக் கூட்டணியில் சேருவதாகும் என்று அந்த வட்டாரம் மேலும் கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset