
செய்திகள் தமிழ் தொடர்புகள்
காஸா இனப் படுகொலைக்கு எதிராக சென்னையில் ஆர்ப்பாட்டம்: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
சென்னை:
காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலையைக் கண்டித்து சென்னை எழும்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன் ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர தாக்குதல்கள், அனைவரின் மனதையும், உலகத்தையும் உலுக்கிக் கொண்டிருக்கிறது.
இதுவரையில், ஏறக்குறைய 11 ஆயிரம் பெண்கள் - 17 ஆயிரம் குழந்தைகள் - 175 பத்திரிக்கையாளர்கள் - 125 ஐ.நா. ஊழியர்கள் என்று, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
26 ஆயிரம் குழந்தைகள் பெற்றோர்களை இழந்திருக்கிறார்கள்; ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் காயம் ஏற்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஓராண்டில் காசாவின் பெரும்பகுதி அழிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், இஸ்ரேல் நாட்டின் ஆக்கிரமிப்பு கொள்கைக்கு எதிராக, பாலஸ்தீன மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
காஸாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இரக்கமற்ற படுகொலைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திக் கொண்டிருக்கும் இனப்படுகொலை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.
இதற்கான முயற்சிகளை, ஒன்றிய பாஜக அரசு வேகமாக மேற்கொள்ளவேண்டும்.
வருகின்ற 14-ஆம் தேதி கூடும் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் காஸாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலைக் கண்டித்தும், அங்கு உடனடியாக போர் நிறுத்தம் தேவை என்பதை வலியுறுத்தியும், அதற்கான முயற்சிகளை இந்திய அரசு எடுக்க கோரியும் தீர்மானம் கொண்டு வரப்படும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 11, 2025, 9:34 pm
திருச்சி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
October 10, 2025, 3:25 pm
விஜய் பிரசாரத்துக்கு 60 டிரோன்கள் கொண்டு வரப்பட்டது ஏன்?: மாவட்ட செயலாளர் மதியழகனிடம் போலீசார் விசாரணை
October 6, 2025, 10:30 pm
ராமதாஸை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்
October 6, 2025, 9:20 pm
ரேஸ் காரில் தமிழக அரசின் லோகோ ஏன்?: அஜித் குமார் விளக்கம்
October 5, 2025, 4:48 pm
இருமல் மருந்தால் பறிபோன 10 குழந்தைகளின் உயிர்: மருத்துவர் கைது
October 4, 2025, 9:36 pm
விஜய்யை கைது செய்ய வேண்டிய நிலை வந்தால் கண்டிப்பாக கைது செய்வார்கள்: அமைச்சர் துரைமுருகன்
October 4, 2025, 8:05 pm
"விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக திட்டம் போடுகிறது”: சீமான்
October 4, 2025, 12:03 pm
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
October 4, 2025, 11:31 am