நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2026 பட்ஜெட்; வரும் ஆண்டிற்கான நாட்டின் திசையாக அமையும்: பிரதமர்

கோலாலம்பூர்:

வரும் வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்படும் 2026 சிவில் பட்ஜெட்டை, வெறும் வருடாந்திர நிதி ஆவணம் மட்டுமல்ல.

அரசாங்கத்தின் முன்னுரிமைகளின் பிரதிபலிப்பாகும்.

மேலும் உண்மையில் இந்த பட்ஜெட் வரும் ஆண்டிற்கான நாட்டின் திசை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இந்த வெள்ளிக்கிழமை எனது நான்காவது பட்ஜெட்டில் கூடுதல் விவரங்களை முன்வைப்பேன்.

மக்களைப் பாதுகாப்பதற்கும், பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும், நிலையான, அனைவரையும் உள்ளடக்கிய நாட்டின் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கும் முயற்சிகளில் இந்த பட்ஜெட் கவனம் செலுத்தும்.

மேலும் சீர்திருத்தங்கள், நாட்டின் மாற்ற நிகழ்ச்சி நிரலின் விளக்கத்தை மக்களுக்கு கொண்டு செல்வதில் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று அவர் இன்று தனது முகநூல் பக்கத்தில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset