நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கமுனிங் உத்தாமா ஸ்ரீ மகா மாரியம்மன்  ஆலய திருப்பணியை பூர்த்தி செய்ய மடானி அரசாங்கத்தின் மானியம் வழங்கப்பட்டது: குணராஜ்

கிள்ளான்:

கமுனிங் உத்தாமா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய திருப்பணியை பூர்த்தி செய்ய மடானி அரசாங்கத்தின் மானியம் வழங்கப்பட்டது.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர்  குணராஜ் ஜோர்ஜ் இதனை தெரிவித்தார்.

நீண்ட காலமாக முழுமை பெறாமலிருக்கும் ஆலயத்தின் திருப்பணிகளை பூர்த்தி செய்து கும்பாபிஷேகத்தை நடத்துவதற்கு உதவும் நோக்கில் இந்த மானியம் வழங்கப்பட்டது.

உள்ளூர் மக்களின் தேவைகளை அறிந்து  அவற்றை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டி வரும் மடானி அரசுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களிடையே நல்லிணக்கத்தை ஆதரிப்பதிலும், ஒற்றுமையை வலுப்படுத்துவதிலும் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் உரிய கவனம் செலுத்தப்படுவதை உறுதி செய்வதிலும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இந்த நடவடிக்கை நிரூபிக்கிறது என்று குணராஜ் கூறினார்.

முன்னதாக  அண்மையில் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் கெஅடிலான் கட்சியின் கோத்தா ராஜா தொகுதி தலைவர் டாக்டர் குணராஜ் கலந்து கொண்டு இந்த மானியத்தை ஆலயப் பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset