நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிங்கப்பூர் சிறையில் பன்னீர் செல்வம் தூக்கிலிடப்பட்டார்: 2 வாரங்களில் இரண்டாவது மலேசியருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது

கோலாலம்பூர்:

சிங்கப்பூர் சிறையில் பன்னீர் செல்வம் தூக்கிலிடப்பட்டார்.

2 வாரங்களில் இரண்டாவது மலேசியருக்கு இத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.

கடந்த 2014ஆம் ஆண்டு 51.84 கிராம் ஹெராயினை நாட்டிற்குள் கடத்தியதற்காக மலேசிய நாட்டைச் சேர்ந்த பன்னீர் செல்வம் பரந்தாமனுக்கு (38) சிங்கப்பூர் மரண தண்டனை விதித்துள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்களும் ஒரு ஆர்வலரும் தெரிவித்தனர்.

ஆம், அவர் தூக்கிலிடப்பட்டார் என்று பன்னீரின் சகோதரி சங்கரி பரந்தாமனும், சிங்கப்பூரை தளமாகக் கொண்ட டிரான்ஸ்ஃபார்மேடிவ் ஜஸ்டிஸ் கலெக்டிவ் குழுவின் உறுப்பினரான கிர்ஸ்டன் ஹானும் தெரிவித்தனர்.

கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி மற்றொரு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து,

சிங்கப்பூரில் இரண்டு வாரங்களுக்குள் இரண்டாவது முறையாக மலேசியர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது இதுவாகும்.
அந்த நாட்டின் சட்டத்தின் கீழ், 500 கிராமுக்கு மேல் கஞ்சா அல்லது 15 கிராம் (0.5 அவுன்ஸ்) ஹெராயின் கடத்தப்பட்டதாகக் கண்டறியப்பட்ட எவருக்கும் கட்டாய மரண தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset