நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தீபாவளியை முன்னிட்டு வழங்கப்பட்ட உதவிப் பொருட்கள் துப்புரவுப் பணியாளர்களின் சுமையை குறைக்கும்: பாப்பா ராயுடு

ஷாஆலம்:

தீபாவளியை முன்னிட்டு வழங்கப்பட்ட உதவிப் பொருட்கள் துப்புரவுப் பணியாளர்களின் சுமையை குறைக்கும் என நான் நம்புகிறேன்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு இதனை கூறினார்.

தீபாவளி பெருநாளை முன்னிட்டு சிலாங்கூர் மாநில தலைமையகத்தில் வேலை செய்யும் இந்திய துப்புரவுப் பணியாளர்களுக்கு உதவிப் பொருட்களுடம் அன்பளிப்புகள் வழங்கப்பட்டது.

இன்று காலை சிலாங்கூர் மாநில தலைமையகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 25 பணியாளர்கள் இதனை பெற்றுக் கொண்டனர்.

மாநில அரசின் முயற்சியால் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில்  இதுபோன்ற உதவிகள் அப்பணியாளர்களின் சுமையை ஓரளவு குறைக்கும் என நான் நம்புகிறேன்.

அதே வேளையில் இதுபோன்ற முயற்சிகள் வரும் காலங்களிலும் தொடரும் என்று பாப்பாராயுடு கூறினார்.

முன்னதாக உதவிகளை பெற்றுக் கொண்ட பணியாளர்கள் பாப்பாராயுடு உட்பட அனைத்து தரப்பினருக்கும் நன்றியை தெரிவித்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset