
செய்திகள் மலேசியா
பெர்னாஸின் சூரியன் திட்டம்; இந்திய வர்த்தகர்களுக்காக அறிவிக்கப்பட்ட முதல் மகத்தான திட்டமாகும்: ஹேமலா
கோலாலம்பூர்:
பெர்னாஸின் சூரியன் திட்டம் இந்திய வர்த்தகர்களுக்காக வரலாற்றில் அறிவிக்கப்பட்ட முதல் மகத்தான திட்டமாகும்.
மைக்கியின் மகளிர் பிரிவுத் தலைவர் ஹேமலா சிவம் இதனை கூறினார்.
இந்திய சமூகத்தில் அதிகமான தொழில் முனைவோரை உருவாக்குவதுடன் இந்திய சமூக உரிமையாளர்களாக்கும் முயற்சியான சூரியன் திட்டத்தை தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் இன்று அறிவித்தார்.
டத்தோஸ்ரீ ரமணன் ஏறகெனவே பேங்க் ரக்யாட்டின் கீழ் பிரிவ்-ஐ, தெக்குன் நேஷனல் கீழ் ஸ்பூமி கோஸ் பிக், எஸ்எம்இ கோர்ப்பின் கீழ் ஐபேப், அமானா இக்தியாரின் கீழ் பெண் திட்டம், எஸ்எம்இ வங்கியின் கீழ் வணிகம் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.
இந்த திட்டங்கள் அனைத்தும் இந்திய சமூக தொழில்முனைவோருக்கு மொத்தம் 357 மில்லியன ரிங்கிட் ஒதுக்கியுள்ளன
மேலும் 12,000க்கும் மேற்பட்ட இந்திய தொழில்முனைவோருக்கு இத்திட்டங்கள் பயனளித்துள்ளன.
இந்நிலையில் சூரியன் திட்டம் இந்திய வர்த்தகர்களுக்கு மேலும் புத்துணர்ச்சியை வழங்கியுள்ளது.
குறிப்பாம இந்த திட்டம் நாடு முழுவதும் 1,000 பங்கேற்பாளர்களை இலக்காகக் கொண்டுள்ளது.
இதில் 20 வருங்கால பிரான்சாய்ஸ் வர்த்தகர்கள், 100 வருங்கால உரிமையாளர்கள், 400 சிறு தொழில்முனைவோர், 500 வேலை வாய்ப்பு பங்கேற்பாளர்கள் ஆகியோர் அடங்குவர்.
இதற்காக 54.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
மலேசிய வரலாற்றில் முதல் முறையாக இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை அறிமுகம் செய்த டத்தோஸ்ரீ ரமணனுக்கு எனது நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
அதே வேளையில் இந்திய சமுகமும் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஹேமலா வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2025, 10:05 pm
நாட்டில் அக்டோபர் நிலவரப்படி 3,141 உணவகங்கள் ரஹ்மா உணவுத் திட்டத்தை தொடர்கின்றன: ஃபுசியா
October 8, 2025, 10:04 pm
சூரியன் திட்டத்திற்கு 54.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: டத்தோ ஏபி சிவம் வரவேற்பு
October 8, 2025, 9:27 pm
2026 பட்ஜெட்; வரும் ஆண்டிற்கான நாட்டின் திசையாக அமையும்: பிரதமர்
October 8, 2025, 6:37 pm
லெவி உயர்த்தப்பட்டால் உணவகத் தொழில் பாதிக்கும்; 15,000 அந்நியத் தொழிலாளர்கள் தேவை: டத்தோ ஜவஹர் அலி
October 8, 2025, 3:28 pm