செய்திகள் மலேசியா
சூரியன் திட்டத்திற்கு 54.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: டத்தோ ஏபி சிவம் வரவேற்பு
கோலாலம்பூர்:
சூரியன் திட்டத்திற்கு 54.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டதை தாம் வரவேற்பதாக ஃபிரான்சாய்ஸ் ஆலோசகர் வாரியத்தின் உறுப்பினராக டத்தோ ஏபி சிவம் கூறினார்.
மலேசிய இந்திய வர்த்தகர்களை உதவும் நோக்கில் சூரியன் திட்டத்தின் கீழ் 54.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது என்று
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அறிவித்தார்.
இதற்கு முன்னர்
பேங்க் ரக்யாட்டின் கீழ் பிரிவ்-ஐ, தெக்குன் நேஷனல் கீழ் ஸ்பூமி கோஸ் பிக், எஸ்எம்இ கோர்ப்பின் கீழ் ஐபேப், அமானா இக்தியாரின் கீழ் பெண் திட்டம், எஸ்எம்இ வங்கியின் கீழ் வணிகம் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த திட்டங்கள் அனைத்தும் இந்திய சமூக தொழில் முனைவோருக்கு மொத்தம் 357 மில்லியன ரிங்கிட் ஒதுக்கியுள்ளதாக டத்தோஸ்ரீ ரமணன் அறிவிப்பு செய்துள்ளார்.
இதன் மூலம் 12,000க்கும் மேற்பட்ட இந்திய தொழில்முனைவோர் பயன் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று இந்திய சமூகத்திற்கு சூரியன் திட்டத்தை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் அறிவித்துள்ளார்.
பெர்னாஸ் உடன் தேசிய உரிமையாளர் சுற்றுச்சூழல் அமைப்பில் மிகவும் வெற்றிகரமான இந்திய சமூக தொழில்முனைவோரை உருவாக்குவதற்கான இந்திய சமூக அடிப்படையிலான உரிமையாளர் முயற்சியான சூரியன் திட்மாகும்.
இந்த திட்டம் நாடு முழுவதும் 1,000 பங்கேற்பாளர்களை இலக்காகக் கொண்டுள்ளது.
இதில் 20 வருங்கால பிரான்சாய்ஸ் வர்த்தகர்கள், 100 வருங்கால உரிமையாளர்கள், 400 சிறு தொழில்முனைவோர், 500 வேலை வாய்ப்பு பங்கேற்பாளர்கள் ஆகியோர் இடம் பெறுவார்கள்.
இதற்காக 54.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறியிருப்பதை பெரிதும் வரவேற்பதாக டத்தோ சிவம் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 13, 2025, 5:50 pm
ஜொகூர் மாநில ஊடகவியலாளர்களுக்கு 1,000 ரிங்கிட் சிறப்பு ஊக்கத் தொகை: மந்திரி புசார் அறிவிப்பு
November 13, 2025, 5:45 pm
சபாவின் 40% உரிமைகள் கோரிக்கை மீதான ஏஜிசியின் முடிவுக்கு மாநில தேர்தல் காரணமாக இல்லை: பிரதமர்
November 13, 2025, 11:15 am
ஆர்டிஎஸ் இயங்கும் போது ஏற்படும் போக்குவரத்து சிக்கல்கள் கவலையளிக்கிறது: துங்கு இஸ்மாயில்
November 13, 2025, 11:14 am
ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் வணிக வளாகங்கள் வழக்கம் போல் இயங்குகின்றன
November 13, 2025, 11:02 am
நவம்பர் 22 அணிவகுப்பில் தெங்கு மைமுன் பங்கேற்க வேண்டும்: இந்திரா காந்தி அழைப்பு
November 13, 2025, 8:37 am
சபா வருவாய் விவகாரத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யாத முடிவை தேசிய முன்னணி வரவேற்கிறது: ஜாஹித்
November 12, 2025, 9:42 pm
ஆமாவா... உங்களுக்கு யார் சொன்னது?: பிரதமர்
November 12, 2025, 9:39 pm
இந்த ஆண்டு 55 மலேசியர்கள் போதைப்பொருள் கழுதைகள் என வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டனர்: ஹுசைன் ஒமார் கான்
November 12, 2025, 9:38 pm
வளர்ச்சி துரோகமாக மாறும்போது சிலாங்கூர் அரசின் வாக்குறுதிகள் நிறைவேறாமல் போகிறது: சார்லஸ் சந்தியாகோ
November 12, 2025, 9:36 pm
