
செய்திகள் மலேசியா
ஆலயங்களுக்கான நிதி விவகாரத்தில் அரசு சாரா இயக்கம் ஏன் வங்கியாக மாற வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன் கேள்வி
கோலாலம்பூர்:
ஆலயங்களுக்கான நிதி விவகாரத்தில் அரசு சாரா இயக்கம் ஏன் வங்கியாக மாற வேண்டும்.
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இக்கேள்வியை எழுப்பினார்.
கிட்டத்தட்ட 1000 ஆலயங்களுக்கு தலா 20,000 ரிங்கிட் நிதி திட்டம் அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இந்திய சமூகத்திற்கான நலத் திட்டங்களை மேற்கொள்வதற்கான இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒப்புதல் கொடுத்த பின் இந்நிதிக்கான விண்ணப்பங்கள் திறக்கப்படும்.
நிதி தேவைப்படும் ஆலயங்கள் நேரடியாக விண்ணப்பம் செய்யலாம்.
நிதி கொடுக்கலாமா இல்லையா என்பது பின் முடிவு செய்யப்படும். இதில் அனைத்தும் மூடு மந்திரம் இல்லாமல் மேற்கொள்ளப்படும்.
ஆக இவ்விவகாரத்தில் மூன்றாம் தரப்பான நாம் ஏன் அரசு சாரா இயக்கத்தை நியமிக்க வேண்டும்.
குறிப்பாக இந்நிதி விவகாரத்தில் அரச சாரா இயக்கம் ஏன் வங்கியாக மாற வேண்டும்.
அவ்வியக்கத்தின் நோக்கம் என்னவென்று டத்தோஸ்ரீ ரமணன் கேள்வி எழுப்பினார்.
2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மக்களவையில் தாக்கல் செய்யவுள்ளார்.
இந்த பட்ஜெட்டில் எந்தவொரு சமுகமும் குறிப்பாக இந்தியர்கள் விடுப்பட மாட்டார்கள். இதில் நான் உறுதியாக உள்ளேன்.
மேலும் அனைத்து இன மக்களின் நலனை காப்பது தான் மடானி அரசாங்கத்தின் முதன்மை இலக்கு என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2025, 6:37 pm
லெவி உயர்த்தப்பட்டால் உணவகத் தொழில் பாதிக்கும்; 15,000 அந்நியத் தொழிலாளர்கள் தேவை: டத்தோ ஜவஹர் அலி
October 8, 2025, 12:55 pm
கேப்டன் பிரபா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் 13 உறுப்பினர்கள் மீது இன்று குற்றம் சாட்டப்பட்டது
October 8, 2025, 12:53 pm
23 ஜிஎஸ்எப் தன்னார்வலர்களுக்கு புதிய கைத்தொலைபேசிகளை ஃபஹ்மி அன்பளிப்பாக வழங்கினார்
October 8, 2025, 11:46 am
கிளந்தானில் உள்ள 5 தங்குமிடப் பள்ளிகளில் 514 இன்ஃப்ளூயன்ஸா தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன
October 8, 2025, 11:30 am