நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

வெளிநாட்டுக்கு செல்லாத இந்திய மருத்துவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு

பெங்களூரு:

இந்தியாவிலேயே கர்நாடகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட இருவரில் ஒருவர் வெளிநாட் டுக்கே செல்லாத உள்ளூர்வாசி மருத்துவர் என்பது தெரியவந்துள்ளது. இதனால் பெங்களூருவில் ஒமிக்ரான் பாதிப்பு பலருக்கு பரவி இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மருத்துவருக்கு எப்படி இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்பது குறித்து அதிகாரிகள் விரிவாக ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

மேலும், பாதிக்கப்பட்ட இருவரும் இரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள்.

Two fully vaccinated Israeli doctors get infected with Omicron variant,  World News | wionews.com

இதுதொடர்பாக பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'ஒமிக்ரான் பாதிப்புக்கு உள்ளான முதல் நப ரான 66 வயதுடைய தென் ஆப்பிரிக்க நாட்டவர் கடந்த மாதம் 20-ஆம் தேதி பெங்களூரு வந்தார். அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டார்.

பின்னர், மறுபரிசோ தனையில் கொரோனா இல்லை என்று முடிவு வந்ததால் நவம்பர் 27இல் துபாய்க்கு சென்றார். அவருடன் முதல்நிலை தொடர்பில் இருந்த 24 பேர், இரண்டாம் நிலை தொடர்பில் இருந்த 240 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

46 வயதான இரண்டாவது நபரான பெங்களூரு மருத்துவருக்கு நவம்பர் 22-ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. முதலில் வீட்டுத் தனிமையில் இருந்த அவர் பின்னர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

தற்போது அவர் ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. அவ ருடன் முதல்நிலை தொடர்பில் இருந்த 13 பேரில் மூவருக்கும், இரண்டாம் நிலை தொடர்பில் இருந்த 205 பேரில் இருவருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள் ளது என்றனர்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset