நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மம்தா அரசியல் சந்தர்ப்பவாதி: காங்கிரஸ் தாக்கு

 புது டெல்லி:

"மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அரசியல் சந்தர்ப்பவாதி' என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

காங்கிரஸை தவிர பிற கூட்டணி கட்சிகளை இணைத்து பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணி அமைக்கும் முயற்சியில் மம்தா முயற்சித்து வரும்நிலையில் காங்கிரஸ் இவ்வாறு தெரிவித்துள்ளது.

மும்பையில் அவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரையும் இதுதொடர்பாக சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா,  "காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தற்போது இல்லை' என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் செய்தித்தொர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா இது தொடர்பாக கூறுகையில், "காங்கிரஸுடன் மோதுவதன் மூலம் பாசிச சக்திகளுக்கு மம்தா துணைபோகிறார். அவர் முழுமையான அரசியல் சந்தர்ப்பவாதியாக மாறிவிட்டார்.

"பாஜக அரசின் அநீதிகளுக்கு எதிராக காங்கிரஸ் போராடி வருகிறது. உண்மைக்கான போராட்டத்துக்கும், அரசியல் ஆதாயத்துக்கான போராட்டத்துக்கும் உள்ள வேறுபாடுகளை அனைத்து எதிர்க்கட்சிகளும் புரிந்து கொள்ளும். மம்தா பானர்ஜி வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு வடிவில் பேசக் கூடியவர். ஏற்கெனவே அவர் பாஜக கூட்டணியிலும், காங்கிரஸ் கூட்டணியிலும் மாறிமாறி பயணித்துள்ளார். தனது அரசியல் ஆதாயத்துக்காக சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவர் செயல்படுவார்" என்றார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset